ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.எந்தவிதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்று டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

சென்னை:

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இன்று பிறந்தநாள். வழக்கமாக அவரது பிறந்த நாளை காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவரது மகன் மறைவுக்கு பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்துவிட்டார். வீட்டுக்கு செல்லும் நிர்வாகிகளை மட்டும் சந்திப்பார்.

இருப்பினும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது.

இதையடுத்து நேற்று இரவே போரூரில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்ந்தார். எந்தவிதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்று டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். சிலர் அவர் பூரண நலம் பெற வேண்டி கோவில்களில் வழிபாடுகள் நடத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com