பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்து எழுச்சி பேரவை நிர்வாகி கைது

சாய்ரகு இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்து எழுச்சி பேரவை மாநகர மாவட்ட தலைவர் சாய்ரகு.
பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்து எழுச்சி பேரவை மாநகர மாவட்ட தலைவர் சாய்ரகு.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (வயது 39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை தஞ்சை-நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.

அப்போது ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிலையில் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாய்ரகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com