இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்

வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திரேஸ்புரம் கடற்கரை வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு வந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com