ரேஷன் கடை-அங்கன்வாடி மையத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடிகள்

நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
ரேஷன் பொருட்களை கரடிகள் சூறையாடியிருந்த காட்சி. 
ரேஷன் பொருட்களை கரடிகள் சூறையாடியிருந்த காட்சி. 
Published on

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன. பின்னர் அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்று சூறையாடி விட்டுச் சென்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு உத்தரவிட்டனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com