

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
பண்ணாரி அம்மன் கோவில்
தினமும் ஈரோடு சேலம் கோயம்புத்தூர் நாமக்கல் கரூர் என தமிழக முழுவதும் பண்ணாரி அம்மனை வழிபட வருகின்றனர். இதே போல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
வனப்பகுதி
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் அமைந்து உள்ளதால் இங்கு கரடி, சிறுத்தை, புலி, யானை நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக யானை நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சிறுத்தை, புலி நடமாட்டமும் அவ்வப்போது இருந்து வந்த நிலையில் இன்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோரம் திடீரென கரடி நடமாடியது.
சாலையை கடந்து சென்ற கரடி சிறிது நேரம் சாலையோரம் அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்தது. கரடி நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டனர். சில வாகன ஓட்டிகள் கரடி நடமாட்டத்தை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த கரடி பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பண்ணாரி அருகே கரடி நடமாட்டம் தென்பட்டதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவன த்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.