சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த வங்கி ஊழியரின் கார்...

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த வங்கி ஊழியரின் கார்...
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது காரை மணப்பாறை எடத்தெரு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.

இன்று காலை வேலைக்கு செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரில் இருந் இறங்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மண்ணை கொட்டி தீயை அணைக்க முயன்றார்.

ஆனாலும் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் நெருக்கு கொழுந்து விட்டு எரியவே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கார் தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com