

பத்திர பதிவுத்துறை உதவியுடன் இவர்களின் சொத்து சார்ந்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம்.
கஞ்சா, போதைப்பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை கஞ்சா, போதைப்பொருள் விற்ற 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
200 பேர் வங்கி கணக்கு முடக்கம்
மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கி பணப்பரிவர்த்தனைகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ள 200 பேரின் ஆவணங்களை பெற்று, சொத்து விபரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:-
கஞ்சா, போதைப்பொருள் சப்ளை பெரும்பாலும் முடக்கியுள்ளோம். பயன்படுத்துபவர்களின் பெற்றோருக்கு தகவல்களை அளிப்பதுடன், கவுன்சிலிங் ஏற்பாடு செய்துதர உதவி செய்கிறோம். மேலும், போதைக்கு மிகவும் அடிமையான போலீஸ் நிலையம் வாரியாக 5 பேர் வீதம் தேர்வு செய்து, கடந்த மாதம் 100 பேரை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
200 பேரின் வங்கிகணக்கு முடக்கியுள்ளோம். பத்திர பதிவுத்துறை உதவியுடன் இவர்களின் சொத்து சார்ந்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம். அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்களையும் சேகரித்து அடுத்தகட்டமாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.