அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளதுஇந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது
அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
Published on

பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது.

இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இன்று நாளை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த ரவிக்குமார் அண்மையில் அயலான் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய 2 திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் வெற்றிப்பட இயக்குநர் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com