அசாம் விமான விபத்து- தி.மு.க எம்பி கனிமொழி இரங்கல்

விபத்தில் சிக்கி 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
அசாம் விமான விபத்து- தி.மு.க எம்பி கனிமொழி இரங்கல்
Published on

இந்திய விமானப்படையின் தளவாடங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் AN-32 ரக விமானம் அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் 'ரௌரியா' விமானப்படைத் தளத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

அசாமில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான AN-32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி, 5 அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com