அருணாச்சலம் சினிமா பாணியில் நகராட்சி ஊழியரின் வாகன சாவியை எடுத்துச்சென்ற குரங்கு

சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர். மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாவியை கடித்தபடி இருந்த குரங்கை படத்தில் காணலாம்.
சாவியை கடித்தபடி இருந்த குரங்கை படத்தில் காணலாம்.
Published on

குழித்துறை:

கன்னியாகுமரி மாவட் டம் குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் ஆதார், இ-சேவை மையம், பிறப்பு-இறப்பு பதிவு மையம், நகராட்சி அலுவலகம் செயல்படுகின்றன. இத னால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் அலுவலகத்துக்குள் சென்றார். மாலையில் மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது, மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் குரங்கு நிற்பதை பார்த்தார். பின்னர் அவர் குரங்கை துரத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு, மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு அருகே நின்ற மரத்தின் கிளை மீது ஏறி மேலே அமர்ந்து கொண்டது.

உடனே சாவியை வாங்கும் முயற்சியில் ஊழியர் மற்றும் பொதுமக்கள் குரங்கிடம் பல்வேறு வித்தைகளை காட்டினர். மேலும் கட்டைகளை எடுத்து வீசியும் பயமுறுத்தினர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குரங்கு சாவியை மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் கொண்டு வைப்பதும், எடுப்பதும் மட்டுமின்றி 2 கைகளில் மாறி, மாறி பிடித்து போக்கு காட்டியது.

ஒரு கட்டத்தில் துரத்தி பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் சாவியை வாங்க முடியாது என முடிவு செய்து சோர்ந்து போய் அமர்ந்திந்தனர். இவர்கள் சோர்ந்து போய்விட்டதை தெரிந்து கொண்ட குரங்கு சாவியை ஊழியர் மீது வீசி எறிந்தது. பின்னர் அங்கிருந்து மரத்துக்கு மரம் தாவி குரங்கு வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.

அருணாச்சலம் சினிமாவில் நடிகர் ரஜினியின் ருத்ராட்சம் மாலையை குரங்கு பறித்து செல்வது போல் குழித்துறை நகராட்சி ஊழியரின் மோட்டார் சைக்கிளின் சாவியை குரங்கு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com