சென்னை கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி செய்ய ஏற்பாடு

மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி செய்ய ஏற்பாடு
Published on: 

மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

முதலமைச்சர் விஜய் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

இலவச வைபை வசதி

இதன் ஒரு பகுதியாக சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கான சேவை வழங்குநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com