

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேர்தல் விதிப்படி, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
மேலும், அ.தி.மு.க. சார்பாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தார். இதனால் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இத்தொகுதிகளிலுக்கு எந்நேரத்திலும் இடைத்தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக பணியாற்றி வருகிறது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த மாதம் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இத்தகவல் குறித்து பலரும் விளக்கம் கேட்டு வருதால் வருகிற 11-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.