

தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.கவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சவால் விட்டு ஆணவமாகப் பேசியுள்ளார். இந்தப் பேச்சிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வருமாம். தில் இருந்தால், தைரியமிருந்தால் 25 மேயர் பதவியில் ஒரு மேயர் பதவியை வெற்றி பெற்று காட்டுங்கள் என ஆணவமாக எங்கள் இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துப் பேசியுள்ளார்.
திடீர் பொறுப்பிற்கு வந்த அமைச்சர் தனது பதவியின் கண்ணியத்தை மறந்து தில், தைரியம் என்றெல்லாம் பேசுவது அநாகரிகமானது. நாங்கள் தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக சொல்கிறோம் உள்ளாட்சி
உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்று காட்டுவோம்.
நாங்கள் வெற்றி பெற்றால் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியலில் இருந்து விலகி விடுவீர்களா? என காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.