அமோனியா வாயு கசிவு: வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை- அமைச்சர் அருண்ராஜ்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Minister Arunraj
Published on

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர்கள் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு அமைச்சர்கள் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

வாயு கசிவு சம்பவம் குறித்த தகவல்கள் முதலமைச்சருக்கு உடனுக்குடன் தகவல் சொல்லப்படுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அமோனியா வாயு கசிவால் 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேர், வேல்ஸ் மருத்துவமனையில் 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அமோனியா வாயுவை சுவாசித்துள்ளனர். இதுபோன்ற ஒரு அமோனியா தாக்குதல் நடந்தது இல்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுமுறையில் இருந்த மருத்துவ பணியாளர்களை வரவழைத்துள்ளோம். முதலில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தான் பாதிக்கப்பட்டவர்கள் சென்றனர்.

தகவல் தெரிந்த உடனேயே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 4 மருத்துவர்கள் கொண்ட 2 குழுவை அனுப்பி வைத்தோம்.

அங்கு சிகிச்சை அளிக்க முடியாதவர்களை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளுக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com