அமோனியா வாயு கசிவு: 3 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
TN CM Vijay
Published on

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்த விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குனர் உள்பட 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிடப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர், பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குனரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

3 பேர் குழு வாயு கசிவு சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 3 பேர் குழு வாயு கசிவு சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com