கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது - மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்

மத்திய தொல்லியல் துறை கீழடி ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. மத்திய தொல்லியல் துறைக்கு சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது - மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்
Published on

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

மத்திய தொல்லியல் துறையின் இந்த செயலுக்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

தொல்லியல் துறை இயக்குநருக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:-

* கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை.

* அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

* அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன.

* இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது.

* தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு.800 -கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com