பாராட்டாமல் இருக்க முடியுமா..! அமைச்சர் கோவி. செழியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வாழ்த்து

4 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பாராட்டாமல் இருக்க முடியுமா..! அமைச்சர் கோவி. செழியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வாழ்த்து
Published on

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.

4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்

புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு நேற்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி செழியனுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச் செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும் கோவி. செழியனும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.

இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி.. பாராட்டாமல் இருக்க முடியுமா..?" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com