விவசாய பயிர்கடன் தள்ளுபடி: சிபிஐ போராட்டம் அறிவிப்பு

5 கோரிக்கைகளை வலியுறுத்தி 29ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.
CPI Veerapandiyan
Published on

தமிழக அரசு அறிவித்துள்ள விவசாய பயிர் கடனை, முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வரும் 29ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் தொழிலாளர்களை நிரந்தரமாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள், ஜி ராம் ஜி திட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com