சென்னையில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்

அகல் விளக்குகள் வண்ண ரகங்களில் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.வண்ண வடிவ அகல் விளக்குகள் பொதுமக்களை கவருகின்றன.
சென்னையில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்
Published on

சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சாலையோர பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் அடுத்து வரவுள்ள கார்த்திகை தீபவிழா ஆகியவற்றுக்கு வீடுகளில் தீப ஒளியேற்றுவதற்காக அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து தயாரான அகல் விளக்குகள் விற்பனை தற்போது தொடங்கி உள்ளது.

இதையொட்டி சென்னை சாலையோர கடைகளில் விதவிதமான பல்வேறு வகையான அகல்விளக்குகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்காக சிறப்பு வண்ண அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்து உள்ளன.

சென்னையில் கொசப்பேட்டை புரசைவாக்கம், வடபழனி, பெரம்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அகல்விளக்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. அகல் விளக்குகள் வண்ண ரகங்களில் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகல் விளக்குகளை ஏராளமான பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். வண்ண வடிவ அகல் விளக்குகள் பொதுமக்களை கவருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெறும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com