தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.
தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
Published on

தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com