சென்னை போர் நினைவு சின்னம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வக்கீல் கைது

சென்னை போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மூன்று இடங்களில் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
சென்னை போர் நினைவு சின்னம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வக்கீல் கைது
Published on

சென்னை:

சென்னை போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரசன்ன வெங்கடேஷ் என்ற வக்கீல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். அப்போது அவர் தான் வக்கீல் என்று கூறி உள்ளார். இதன் பிறகும் ஆவணங்களை கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வக்கீல் என்று சொன்ன பிறகும் ஆவணங்களை கேட்கிறீர்களே என தகராறு செய்த பிரசன்ன வெங்கடேஷ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனை, தாக்கியுள்ளார்.

இதில் மூன்று இடங்களில் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல் பிரசன்ன வெங்கடேஷை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com