கல்வராயன் மலையில் ஏடிஜிபி அதிரடி ஆய்வு

மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு.கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
கல்வராயன் மலையில் ஏடிஜிபி அதிரடி ஆய்வு
Published on

கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார்.

கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு, குரும்பலூர், சிறுகல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ட்ரா கார்க், கள்ளக்குறிச்சி எஸ்.பி.ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏடிஜிபி சோதனை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com