திருத்தணி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா

கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.
திருத்தணி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா
Published on

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com