தனியார் பள்ளி பேருந்தில் ஆசிட் பாட்டில் வெடித்து விபத்து- 18 மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி பேருந்தில் ஆசிட் பாட்டில் வெடித்து விபத்து- 18 மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்
Published on

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com