ஆம்னிபஸ் கவிழ்ந்து 24 பேர் படுகாயம்- ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.24 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்னிபஸ் கவிழ்ந்து 24 பேர் படுகாயம்- ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Published on

தஞ்சாவூர்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவர் உள்பட 28 பேர் இருந்தனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அவில்தார் சத்திரம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

இந்த விபத்தில் டிரைவர், பயணிகள் என 24 பேர் படுகாயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 24 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com