சென்னையில் ஓடும் பேருந்தில் திடீர் ஓட்டை- சரிந்து விழுந்த பெண் பயணியால் பரபரப்பு

பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்து.ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றார்.
சென்னையில் ஓடும் பேருந்தில் திடீர் ஓட்டை- சரிந்து விழுந்த பெண் பயணியால் பரபரப்பு
Published on

சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டையில் சறுக்கியபடி கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார்.

இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com