செஞ்சி அருகே சாமி ஆடி அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.
சாமி ஆடிக்கொண்டு அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்.
சாமி ஆடிக்கொண்டு அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்.
Published on

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆர். நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சாமி ஆடிக்கொண்டு ஒரு பெண் வந்தார். அவரிடம் சென்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் என்ன என்று கேட்டபோது அண்ணாநகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கிறோம் எங்கள் பகுதிக்கு ரோடு போட்டு தரணும் என்று கேட்டார் .

அதற்கு வழியில் உள்ளவர்கள் நிலம் தந்தால் சாலை அமைத்து தருகிறேன் என்று அமைச்சர் சொன்னதற்கு அதையெல்லாம் நீ பார்த்துக்கோ எங்களுக்கு ரோடு தான் வேணும் என்று சொன்னார். பின்னர் அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com