சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.35 ஆயிரம் பறித்த திருநங்கை

ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.35 ஆயிரம் பறித்த திருநங்கை
Published on

சேலம்:

சென்னையில் இருந்து 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நேற்றிரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் வந்த போது திருநங்கை ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

தொடர்ந்து 2 பேரும் ஆட்டோவில் சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். பின்னர் திருநங்கை அந்த நபரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com