ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
Published on

ராயபுரம்:

திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னா (வயது 30). திருமணமானவர். இவர் தொண்டையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவருக்கு நவம்பர் 1-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சின்னா உள்நோயளியாக தங்கி கிச்சையில் பெற்று வந்தார். எனினும் நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறிவந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சின்னா ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்டு ஆஸ்பத்தரியில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com