இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி- பொதுமக்கள் தர்ம அடி

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர். தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி- பொதுமக்கள் தர்ம அடி
Published on

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள மலையாண்டி பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டிற்குள் ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜா என்ற மரியலூயிஸ்ராஜா (வயது 42) என்பவர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியரா ஜாவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com