கடலூர் இன்ஸ்பெக்டர் உடல்நலம் பெற வேண்டி போலீசார் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
கடலூர் இன்ஸ்பெக்டர் உடல்நலம் பெற வேண்டி போலீசார் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
Published on

கடலூர்:

கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி பூரண குணமடைய வேண்டி கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ருத்திராம்பாள், கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு அருள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com