சாய ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது.
சாய ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதை படத்தில் காணலாம்.
சாய ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலை உள்ளது. இங்கு பனியன் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com