பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை திடீர் மரணம்

குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார். கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை திடீர் மரணம்
Published on

ஈரோடு:

ஈரோடு வெண்டி பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஹெல்பிங் ஹார்ட் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் கமலபாபு (32).

இவர் கோவையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார். பிறந்த 16 நாட்களேயான அந்த குழந்தைக்கு கடந்த 25-ந் தேதி இரவு 11.15 மணியளவில் திடீரென மூக்கில் ரத்தம் வந்து உடல் நிலை சரியில்லாமல் போனது.

உடனடியாக குழந்தையை ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com