

பட்டமளிப்பு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, தனது மனைவியுடன் கோவை வந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான சுமார் 4.93 கோடி வாக்குகள் என்பது, சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலத்தில் பதிவான மிக அதிகபட்ச வாக்குகள் ஆகும். அதேபோல, சுமார் 86 சதவீத வாக்குப்பதிவை எட்டியதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்து வாக்காளர்களையும் நான் பாராட்டுகிறேன்.
இதுவும் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும். அமிர்தா விஸ்வா வித்யபீடம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக எனது மனைவி அனுராதாவுடன் இன்று கோவை வந்துள்ளேன்.
தென்னிந்தியாவில் வளர்ந்துவரும் முக்கிய நகரங்களில் மட்டும் கோவை இல்லை, உலகத்தரம் வாய்ந்த கல்விமுறை, ஜவுளித் தொழில்கள், பொறியியலிலும் சிறந்து விளங்குகிறது.” என தெரிவித்தார்.