அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு..!- நிதி அமைச்சர் மரிய வில்சன்

உணவு மற்றும் கலைத் திருவிழாக்களுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
Minister Maria wilson
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.

காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.

இந்நிலையில், அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 3000 திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான 213 கோவில்கள் புனரமைக்கப்படும்.

உணவு மற்றும் கலைத் திருவிழாக்களுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் உணவுச்

சுற்றுலா வழித்தடங்கள் அறிமுகம் செய்யப்படும்.

நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

200 சிறந்த நாட்டுப்புற கலைக்குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாள் நிகழ்ச்சி நடத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலா- கலை, பண்பாட்டுது் துறைக்கு ரூ.775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com