மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா- 7 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கின

அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர்.சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.
மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா- 7 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கின
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர். அவரின் குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணை கரை கோட்டாலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.

தொடர்ந்து அணையில் இறங்கி வலையை வீசி விரால், ஜிலேப்பி, கட்லா, ரோகு கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 7000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இப்பகுதி திருவிழா போல காட்சியளித்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com