மகளிர் உரிமைத்தொகை திட்டம்- இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு

ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவிப்பு.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்- இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு
Published on

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com