கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பறித்த 6 பேர் கும்பல் கைது

கல்லூரி மாணவர்களை குறிவைத்து அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது.6 பேரிடம் இருந்து 18 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பறித்த 6 பேர் கும்பல் கைது
Published on

கேளம்பாக்கம்:

கேளம்பாக்கம் அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வண்டலூர் அருகே உள்ள வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபினேஷ், செல்வகுமார், மோகன், சூரியா, வெங்கடமங்களத்தை சேர்ந்த தமிழ்செல்வன், சூரியா ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com