கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 42ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 42ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
Published on

கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 21ஆயிரத்து 60கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 82.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 782 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு 42ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com