பிரதமர் மோடியை இலங்கையில் இருந்து அழைத்து வர 4 ஹெலிகாப்டர்கள் தயார்

பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார்.
பிரதமர் மோடியை இலங்கையில் இருந்து அழைத்து வர 4 ஹெலிகாப்டர்கள் தயார்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரெயில் மேம்பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

முன்னதாக ஏப்ரல் 4, 5-ந் தேதிகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார். அதனை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ளன. இதற்காக நேற்று உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.17 ஹெலிகாப்டர்கள் இங்கிருந்து இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி அன்று காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும். அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்கும். இவற்றில் மூன்று ஹெலிகாப்டர் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com