அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி சனி சந்தையில் மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

பாப்பாத்தி அப்பகுதியில் 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மர்ம விலங்கு கடித்து பலியான ஆட்டை காணலாம்
மர்ம விலங்கு கடித்து பலியான ஆட்டை காணலாம்
Published on

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி சனி சந்தை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி பாப்பாத்தி (50). இவர் அப்பகுதியில் கீத்துப் பின்னும் தொழில் செய்து கொண்டு 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை செம்மறியாடுகளை தனது வீட்டு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை ஆட்டுக்கொட்டைக்குச் சென்று பார்த்த பொழுது 4 செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனப்பகுதி அருகில் உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் கடித்துள்ளதா? அல்லது மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து வருவாய் துறைக்கும், வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com