மேலும் 3 இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள்- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு

மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள்- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு
Published on

சென்னை:

சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.

பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.

மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.

இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.

இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com