சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை

கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா (வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோணி மகாராஜா உள்பட 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

அதேபோன்று அதே பகுதியை சேர்ந்த அந்தோணி தென் டேனிலா (வயது 23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

இந்த 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தருவைகுளத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் மடக்கி பிடித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடற்படையில் தளத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிறை பிடிக்கப்பட்ட 22 பேரை விடுதலை செய்யக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தருவைகுளம் ஊராட்சி கூட்டமைப்பினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com