பாலியல் தொழிலை தடுக்க தவறிய 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள்- ஆயுதப்படைக்கு இடமாற்றம்

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொழிலை தடுக்க தவறிய 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள்- ஆயுதப்படைக்கு இடமாற்றம்
Published on

திருச்சி:

திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com