130 கி.மீ. தூரம் மின்மயம் விருதுநகர்-புனலூர் இடையே இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தின்போது அதிகாரிகள் தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தின்போது அதிகாரிகள் தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
Published on

மதுரை:

விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை-பகவதிபுரம், இடமன்-புனலூர் இடையேயான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த மின்மாயமக்கபட்ட ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை மின்சார அதிவேக ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரெயில், மதியம் புனலூருக்கு சென்றது. அடுத்தபடியாக புனலூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் அதிவேக என்ஜின் ரயில், 4.35 மணிக்கு எடமன் செல்லும். இதனைத் தொடர்ந்து பகவதிபுரத்தில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் அதிவேக ரயில், இரவு 8.30 மணிக்கு விருதுநகர் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை பிரிவில் ஒட்டுமொத்தமாக 140.89 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 129.99 கி.மீ. தொலைவிற்கு மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்காக மின்சார நுகர்வு விருதுநகர், வஞ்சி மணியாச்சி துணை மின் நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. இது தவிர சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அடுத்தபடியாக திருத்தங்கல்-பாம்பு கோவில் சந்தை பிரிவில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளில் துணை செக்சன் போஸ்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

விருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போ, ராஜபாளையத்தில் புதிதாக அமைய உள்ள டிப்போ ஆகியவை மேற்கண்ட பிரிவின் மின்சார பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும். விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், புதிதாக ராஜ பாளையத்தில் டவர் வேகன் சைடிங் வருகிறது.

செங்கோட்டை-பகவதிபுரம் மற்றும் எடமன்-புனலூர் பிரிவில் ஒட்டு மொத்தமாக 16.71 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 14.70 கி.மீ. ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் 2 பிளாக் ஸ்டேசன்கள் உள்ளன. இதற்காக தென்மலையில் செக்ஷனிங் போஸ்டர்கள் உள்ளன.

அடுத்தபடியாக புதிய ஆரியங்காவு, எடமன், பகவதிபுரம் ஆகிய இடங்களில் துணை செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான மின்சார பராமரிப்பு தேவையை விருதுநகர், ராஜபாளையத்தின் ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போக்கள் பூர்த்தி செய்யும். விருதுநகரில் ஏற்கனவே டவர் வேகன் சைடிங் உள்ளது. இதுதவிர ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங்கும் அமைய உள்ளது. எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனலூர்-கொல்லம் இடையே ஏற்கனவே மின் மயமாக்கல் முடிக்கப்பட்டு, அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com