ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை- மன்னார் நீதிமன்றம் உத்தரவு

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார்.இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை- மன்னார் நீதிமன்றம் உத்தரவு
Published on

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிச. 24-ந்தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் வழக்கு இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார். மேலும் இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் 2 மீனவர்களின் வழக்கு விசாரணையை பிப்.12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com