வேடசந்தூரில் 100 வயது சுதந்திர போராட்ட தியாகி மரணம்

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார். உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வேடசந்தூரில் 100 வயது சுதந்திர போராட்ட தியாகி மரணம்
Published on

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி (வயது 100). கடந்த 1923ம் ஆண்டு ஆக.15-ல் பிறந்த இவர் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டவர். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 1 மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வேடசந்தூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com