மின்வாரிய தலைமையகத்தில் EB டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்

அதிக அளவில் மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மின்வாரிய தலைமையகத்தில் EB டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்
Published on

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவில் மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 16, 17 தேதிகளில் திருட்டு நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com