எம்.பி.க்களிடம் அதிருப்தி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அபிஷேக் பானர்ஜி அவசரக் கடிதம்

திரிணாமூல் காங்கிரஸை முறையாக அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மற்றும் கொறடா மூலம் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒற்றைக் கட்சியாக கருத வேண்டும் என கடிதத்தில் அபிஷேக் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.க்களிடம் அதிருப்தி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அபிஷேக் பானர்ஜி அவசரக் கடிதம்
Published on

மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியை மம்தா காப்பாற்ற போராடி வருகிறார். வெற்றி பெற்ற 80 எம்.எல்.ஏ.-க்களில் 60 முதல் 65 பேர் வரை தனியாக செயல்பட்டு வருகின்றன. இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.-க்கள் ஒரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதற்கிடையே 19 முதல் 20 திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஒன்றாக கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் பிளவுப்பட்டு இருப்பதால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவு குரூப்பிடம் சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மம்தாவின் உறவினரும், மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அபிஷேக் பானர்ஜி கூறியிருப்பதாவது:-

எந்தவொரு முடிவிற்கும் முன் திரிணாமூல் காங்கிரஸின் தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

திரிணாமூல் காங்கிரஸை முறையாக அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மற்றும் கொறடா மூலம் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒற்றைக் கட்சியாக கருத வேண்டும்.

திரிணாமூல் காங்கிரஸின் எந்தவொரு தனிப்பட்ட குழு/பிரிவிற்கும் அங்கீகாரம், அந்தஸ்து அல்லது வசதியை மறுக்க வேண்டும்

இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com