

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு பிஞ்சு வயதில் வறுமை மற்றும் சட்டவிரோத காரணிகளால் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர், சிறுமிகளை மீட்டெடுக்க இத்தினம் விழிப்புணர்வாக அமையும்.
2002 ஜூன் 12 இல் இத்தினத்தை முதன் முதலில் உலக தொழிலாளர் சங்கம் அறிவித்து கவனம் ஈர்த்தது. அரசுகள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதை தடுக்க வேண்டும் என்பதே இந்த முன்னெடுப்பின் பிரதான நோக்கம்.
2002க்கும் 2026க்கும் இடையில் பல மாற்றங்கள் நிகழினும் குழந்தைகள் தொழிலாளர்கள் ஆக்கப்படும் அவலம் இன்னும் ஒழிந்தபாடில்லை.
ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் உடைய தரவுகள் படி, 2024 இல் உலகம் முழுவதும் 13.8 கோடி குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக இருந்துள்ளனர்.
இவர்களில் 5.4 கோடி குழந்தைகள் உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்தான வேலைகளை செய்து வந்துள்ளனர்.
குழந்தை தொழிலாளர் விகிதத்தில் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் இராண்டாம் இடத்தில் உள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை இன்றளவும் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனை சமூகத்தில் வேரூண்றியுள்ளது.
கடைசியாக 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1.01 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் 5 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்துள்ளனர்.
பள்ளிகளில் இருந்து இடைநிற்றல், புலம்பெயர்தல், குடும்ப கடன், வறுமை ஆகியவை குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றியுள்ளன.
இந்தியாவில் 2016 குழந்தை தொழிலாளர்கள் சட்டம் கடுமையாகப்பட்டது. அதன்படி 14 வயதுக்கு உட்பட சிறார்கள் வேலை செய்ய கூடாது. வேளைக்கு அமர்த்தப்பட கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் விவசாயம், வீட்டு வேலை, சிறு குறு உற்பத்தி தொழில்கள், கட்டுமானம், சுரங்க தொழில், தெருவோர கடைகள், மற்ற முறையற்ற வேலைகளில் குழந்தைகள் இன்னும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நாளில் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதை தடுக்கும் வகையில் நம்மால் முடிந்த வரையில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ மற்ற ஊடகங்கள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சமூகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பாக அமையும்.